The Jackfruit tree has many uses-
*Every town or place has something special to offer .It could either be a fruit or some other natural resource.In that respect, the town ‘Panrutti’ should remind us of ‘Jackfruit’. Let us see here the uses of the Jackfruit tree which bears the jackfruit .
*Jackfruit is one among the three famous fruits of Tamil Nadu. The other two are mango and banana.
*India boasts of being the motherland of jackfruit
*Jackfruit is also known as Benny, Kandhal, ganar, Bignai, Naangas, Langa, Jackeer across many languages.It is a tropical fruit and grows well in warm temperatures.
*Jackfruit tree is drought resistant.
*Jackfruit tree grows well in alluvial soil, crown soil, sand and clay.
*Jackfruit tree grows well in flat lands and low land forests up to the height of 1200 m .
*The leaves of the jackfruit tree wither away a bit during the winters.But the leaves never wither away completely during any season. Generally, the jackfruit seeds are used to grow more
jackfruit trees.
*Jackfruit trees are very strong trees and hence jackfruit wood is used in the manufacture of furniture, doors, windows, in roof construction and also for making musical instruments
*Jackfruit trees typically contain a sticky white latex juice which can be used to fix broken pieces.
*Jackfruit has a spiky outer skin which is green or yellow in color and is used to make green or yellow dyes.
*Jackfruit tree leaves also have medicinal properties to heal cuts, wounds and also cure other stomach related ailments.
*The extract made from boiling the leaves of the jackfruit tree are used to skin diseases and asthma.
*Vinegar is added to the white juice of the jackfruit tree and is used to treat tumours, snake bites and inflammation of the veins.
அனைத்து பாகங்களிலும் நன்மைகள் கொண்ட பலா மரம்..!
🌳 ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சில சிறப்புகள் உண்டு. அவை பழமாகவோ அல்லது பொருளாகவோ இருக்கும். அந்த வகையில் பண்ருட்டி என்றால் நம் நினைவிற்கு வருவது பலாப்பழம். அந்த பழத்தை தரும் பலாமரத்தை பற்றி இங்கு காண்போம்.
🌳 தமிழகத்தின் முக்கனியில் ஒரு கனியாக பலாப்பழம் விளங்குகிறது.
🌳 பலா மரத்தின் தாயகமாக இந்தியா விளங்குகிறது.
🌳 இந்த மரத்திற்கு பென்னி, காந்தல், கனார், பிக்னாய், நான்காஸ், லங்கா, ஐக்கீர் என்ற பலமொழிப் பெயர்கள் உள்ளன. பலா ஒரு வெப்பமண்டல பழமரம் ஆகும். இது மித வெப்ப இடத்திலும் நன்கு வளரும்.
🌳 மேலும் வறட்சியை தாங்கி வளரும் தன்மை இந்த மரத்திற்கு கிடையாது.
🌳 வண்டல் மண், இருமண் பாடான மண், மணல் சாரி இடங்கள், களிமண் பாங்கான நிலம் ஆகியவற்றில் இந்த மரம் நன்கு வளரும்.
🌳இது சமவெளி மற்றும் 1,200 மீட்டர் உயரம் வரையில் உள்ள மலைப்பகுதிகளில் நன்கு வளரும்.
🌳 பலா மரத்தின் இலைகள் பனிக்காலத்தில் சற்று உதிரும். ஆனால், எந்த பருவத்திலும் இதன் இலைகள் முழுவதும் உதிர்வதில்லை. பொதுவாக, பலா விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
🌲 பலா மரம் கடினமான மரங்களில் ஒன்றாகும். எனவே இதை மேஜை, நாற்காலிகள், கட்டுமானப்பொருட்கள், கருவிகள், கம்பங்கள் ஆகியவற்றை செய்ய பயன்படுத்துகிறார்கள்.
🌲 மேலும் மரங்கள் கடைசல் வேலைகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
🌲 பலா ஒரு பால் வடிக்கும் மரம். அந்த பாலை கொண்டு உடைந்து போன பொருட்களை ஒட்டலாம்.
🌲 பலா மரத்தின் பட்டைகளில் இருக்கும் டேனின் கொண்டு மஞ்சள் சாயம் தயாரிக்கலாம்.
🌲 மேலும் பலாமரத்தின் இலைகள் காயங்கள், கட்டிகள், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
🌲 பலாவின் வேரில் கஷாயம் வைத்து குடித்தால் வயிற்றுப் போக்கு, தோல் நோய்கள், ஆஸ்துமா போன்றவற்றை குணப்படுத்தலாம்.
🌲 பலாப்பாலுடன், வினிகர் சேர்த்து, கட்டிகள், பாம்புக்கடி, மற்றும் நாளங்களில் எற்படும் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தலாம்.