Crop Insurance in India – Tamil

அன்பான..
விவசாயிகளுக்கு வேளாண்துறை இனிய வணக்கங்கள்..
பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் ( PMFBY) பற்றி உங்களுக்கு தெரியுமா?
உங்கள் பயிர்களை இன்சூரன்ஸ்.. அதாவது பயிர் காப்பீடு செய்து விட்டீர்களா?
போன வருசம் பயிர் காப்பீடுக்கு பணம் கட்டினேன் சார்.. எனக்கு பணம் கிடைக்கல சார்.. இது உங்க கேள்வியானால் உங்களுக்கான பதில் இதோ..
ஒரு விஷயத்தை தெளிவாக தெரிந்து கொண்டு பயிர் காப்பீடு செய்வோம் தோழர்களே…!
பயிர் மழை இல்லாமல் கருகினால் இழப்பீடு உண்டு.. அல்லது அதிக மழை பெய்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தால் பயிர் காப்பீடு நிவாரணம் கிடைக்கும்.. பயிர் காப்பீட்டுக்கு பணம் கட்டிவிட்டாலே மான்யம் அல்லது நிவாரணம் கிடைக்கும் என்று யாராவது சொன்னால் அதனை நம்ப வேண்டாம் விவசாய தோழர்களே..
பயிர் காப்பீடு குறித்த சில விளக்கங்கள்..
பயிர் காப்பீடு..ஏன்? எங்கு? எப்படி? யாரை? இப்படி உங்கள் அனைத்து கேள்விக்கும் பதில்..
உதாரணமாக தற்போது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்து பயிர்கள் மழையினால் சேதமடைந்து விட்டது.. அந்த பகுதியில் கடந்த காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் அனைவருக்கும் நிச்சயம் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கும்…
காப்பீடு செய்யாத விவசாயிகள் நிலைமையை ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்…
விவசாயிகள் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்பது பழமொழி.. நாம்தான் புத்திசாலித்தனமாக வாழ கற்று கொள்ள வேண்டும்…
நாம் கட்டும் பிரிமியம் மிக குறைவு.. ஆனால் நமக்கு கிடைக்கும் பலன் அதிகம்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக மழை இல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பயிர் செய்ய முடியாமல் தவித்த நமக்கு இந்த ஆண்டு ஆண்டவன் புண்ணியத்தில நல்ல மழை பெய்து நல்ல விளைச்சல் கிடைச்சிடுச்சின்னா.. இன்னும் சந்தோசமா பொங்கலை கொண்டாடுவோம்.. ( அப்ப.. ஏக்கருக்கு 442.50 ரூபாய் கட்டின பணம் கிடைக்குமா..? ஆச.. தோச.. நீங்க கட்டின பணம் இந்தியாவின் ஏதோ ஒரு விவசாயிக்கு நிச்சயம் நிவாரணமாக கிடைத்திருக்கும்…

பயிர்கடன் லோன் வாங்கும் விவசாயிகளுக்கு தானாக இழப்பீடு அவர்களது வங்கி கணக்கில் வந்து சேரும்..
ஆனால் பயிர் கடன் வாங்காத விவசாயிகள் எப்படி பயிர் காப்பீடு செய்வது???
லோன் வாங்காத அனைத்து விவசாயிகளும் அனைத்து வேளாண்துறை பயிருக்கும் ரபீ பருவத்திற்கு வரும் 2018 நவம்பர் 30ம் தேதிக்குள் உங்கள் அருகாமையில் உள்ள தேசிய வங்கிகளிளோ.. கூட்டுறவு வங்கிகளிலோ.. அல்லது.. மத்திய அரசின் அனுமதி பெற்ற CSC பொது சேவை மையத்திலோ.. பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்..
முதலில் உங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் அதிகாரிகளை சந்தித்து உங்கள் கிராமத்தில் எந்தெந்த பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியும் ( Notified Village.. Notified Crop.. ) என தெரிந்து கொண்டு வேளாண்துறை அலுவலர்களிடம் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்யுங்கள்..
1. Amount 442.50/- 1ஏக்கருக்கு (It will vary from district to district).
2. பூர்த்தி செய்யப்பட்டு விவசாயிகள் கையெழுத்து போடப்பட்ட பயிர் காப்பீடு விண்ணப்பங்கள்.
3.வங்கி கணக்கு புத்தகம் ஒரிஜினல்..
4. ஆதார் அட்டை
5. Computer சிட்டா..
6.விதைப்புசான்று கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் ஒரிஜினல்..
7. விவசாயி போட்டோ 1 காப்பி..
இந்த அனைத்து ஆவணங்களையும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு எடுத்துச்சென்றால் அதனை ஸ்கேன் செய்து பிறகு ஆன்லைன் முறையில் பயிர் காப்பீடு செய்து ரசீது தருவார்கள்..
குறிப்பு:-
பொது சேவை மையங்களுக்கு செல்லும்போது சம்மந்தப்பட்ட விவசாயி நேரில் ஆதார் எண் கொடுத்து கைரேகை மூலம் பதிவு செய்ய வேண்டும்..
கைரேகை எடுக்கவில்லை என்றால் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்ட மொபைல். எண் மூலம் பயிர் காப்பீடு செய்யலாம்..
அதனால் பயிர் காப்பீடு செய்ய வரும் விவசாயிகள் மொபைல் போனை அவசியம் எடுத்து வர வேண்டும்..
ஆதார் எண்ணில் கைரேகையும் எடுக்கவில்லை.. மொபைல் எண்ணும்
இணைக்கப்படவில்லை என்றால் அந்த விவசாயி நிச்சயம் பயிர் காப்பீடு செய்ய முடியாது..
ஆதார் சேவை மையங்களுக்கு சென்று மீண்டும் பதிவு செய்த பிறகுதான் அந்த குறிப்பிட்ட விவசாயி பயிர் காப்பீடு செய்து கொள்ள முடியும்…
நில உரிமையாளர் நேரில் வரவேண்டும்.. ஒருவேளை அவர் இறந்து போயிருந்தார் என்றால் அவரது வாரிசுகள் யாருடைய அனுபவத்தில் உள்ளது என்ற VAO சான்று அவசியம் தேவை..
பயிர் விதைப்புச்சான்று அடங்கல் வாங்கும்போது உதாரணமாக 2 ஏக்கர் நெல் விவசாயி முழுவதுமாக பயிர் காப்பீடு செய்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.. ஆனால் 2 ஏக்கர் பயிர் செய்துள்ளேன்.. 1 ஏக்கர். மட்டுமே பயிர் காப்பீடு செய்கிறேன் என்று சொன்னால் அந்த 1 ஏக்கர் எந்த பகுதி விவசாய நிலம் காப்பீடு செய்யபடுகிறது என்ற திசை வாரியாக அதே அடங்கலில் செக்குபந்தி அவசியம்..
மேலும் விபரங்களுக்கு
உங்கள் பகுதி ADA , AO , DYAO , AAO தொடர்பு கொள்ளுங்கள்..
விவசாயிகள் நலனில் அக்கறை உள்ள வேளாண்துறை