டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி !!
🐞 டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி என்பது நன்மை செய்யும் பூச்சிகளில் ஒன்றாகும்.
🐞 இதை நெல், கரும்பு, பருத்தி, காய்கறி பயிர்கள் மற்றும் பயிர்வகைகள் போன்ற பயிர்களில் பயன்படுத்தலாம்.
🐞 இந்த முட்டை ஒட்டுண்ணி குருத்துப் புழு, இளங்குருத்துப்புழு, இடைக்கணுப்புழு, தண்டுபுழு மற்றும் காய்துளைப்பான் மற்றும் அமெரிக்கன் காய்ப்புழு போன்ற புழுக்களின் முட்டைகள் பயிர்களைத் தாக்காமல் பாதுகாக்கிறது.
🐞 ஏக்கருக்கு 5 மில்லி என்ற எண்ணிக்கையில் இந்த ஒட்டுண்ணியைப் பயன்படுத்தலாம். அதாவது 1மில்லி அட்டையிலிருந்து, 15-20 ஆயிரம் குளவிகள் இதிலிருந்து உருவாகி பயிர்களைப் பாதுகக்கின்றன.
🐞 டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படுகிறது. ரசாயன உரங்களின் பயன்பாட்டையும் இதன் மூலம் குறைக்கலாம்.