Rain Water Harvesting – Tamil

மழைநீர் சேகரிப்புப் பற்றி வேளாண் பொறியாளரின் கருத்து..!
மழைநீரை சேகரிக்க வேண்டும்..!

🍂 தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 3 மாதங்கள் (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும்.

🍂 தமிழகத்திற்கு வடகிழக்குப்பருவ மழை இந்த வருடம் அக்டோபர் 29-ம் தேதி துவங்க வாய்ப்புள்ளது. ஆனால் குறிப்பிடத்தகுந்த மழை டிசம்பர் 10-ம் தேதி வரை மட்டுமே நீடிக்கும். இக்காலகட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சுமார் 5 முதல் 8 உழவு மழை மட்டுமே அதிகபட்சமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிலும் பொதுவாக 4 – 5 உழவு மழை மட்டுமே பரவலாகக் கிடைக்கும். நீண்ட வறட்சியை சமாளித்து நிலத்தடிநீர் உயர சுமார் 6 உழவு மழையாவது அடிப்படையாகத் தேவை.

🍂 செம்மண், மணல் வகை நிலப்பகுதி விவசாயிகள் முறையாக வயலைச்சுற்றி வரப்பமைத்து பெய்யும் மழைநீரை உங்கள் வயலிலே சேமித்தால் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து கிணறு போரில் தண்ணீர் வற்றாமல் இருக்கும்.

🍂 இந்த வகை நிலங்களில் 3 நாட்கள் வரை தண்ணீர் தேங்கியிருந்தாலும் பயிருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதனால் பயமின்றி வயலில் தண்ணீரை சேமியுங்கள்.

🍂 மேலும் தண்ணீர் தேங்கி நின்றால் ஒருவேளை உப்பு அதிகமாக அதாவது அமில காரநிலை 7.5 க்கு மேல் இருந்தாலும் உப்பு அலசப்பட்டு அதன் பாதிப்பு பெருமளவு குறைந்துவிடும்.

🍂 களிமண்ணிலும் வடிகால் வசதியை உறுதிப்படுத்திவிட்டு பின்பு நீரை வயல்களில் சேமிக்கலாம். இதனால் மண்ணில் உப்பு மற்றும் சுண்ணாம்புகளால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.

‘மழைநீரை அவசியம் சேமிக்கவும்.”