நெற்பயிருக்கு தண்ணீர் தேவைப்படும் தருணங்கள்…!
🌾 தற்போது நெல் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டுள்ளது. நெற்பயிரில் நீர்ப்பாசனம் மிகவும் முக்கியமானது. நெற்பயிருக்கு நீர்ப்பாசனம் அளிக்கும் தருணங்கள் பற்றி இங்கு காண்போம்.
🌾 பொதுவாக நெற்பயிரில், 2.5 செ.மீ. நீரைத் தேக்கி, தேக்கப்பட்ட நீர் மறைந்ததும் மீண்டும் பாசனம் அளிக்க வேண்டும்.
🌾 இந்த பாசனத்தால், நிலத்திற்கு தேவையான காற்றோட்டம் கிடைக்கிறது. பயிருக்கு தேவையான நீர் கிடைக்கிறது. எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல மகசூல் கிடைக்கிறது.
🌾 நெல் வயலில் எப்போதும் நீர் தேக்க வேண்டும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் வயலில் நீர் தேங்க கூடாது.
🌾 நெல் வயலில் நீர் தேக்கினால் மண்ணில் பிராண வாயு கிடைக்காமல் வேர்களின் வளர்ச்சி குன்றி பயிர் வெளுத்துப் போகும்.
🌾 அதிக நீரானது, மண்ணில் உள்ள பயிர் ஊட்டச்சத்துடன் சேர்ந்து மண்ணிற்கு கீழே இறங்கிவிடும். இதனால், இந்த ஊட்டச்சத்துக்களை பயிர் எடுத்துக் கொள்ள முடியாதபடி வீணாகிவிடும்.
🌾 மேலும், மண்ணில் தொடர்ந்து நீர் தேங்கும்போது மண்ணில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் செயல்புரியும் தன்மை பாதிக்கப்படுகிறது.
🌾 நீர் எப்போதும் நெல் வயலில் தேங்கும்போது பயிர் வளர்ச்சிக்காக இடப்பட்ட உரம் பயிருக்கு கிடைக்காமல் நீரில் கரைந்து விரயமாகும். மேலும், வயலில் இட்ட தழை மக்கி அழுகும்போது உண்டாகும் பாதகமான அமிலங்களும் வடியாமல் நிலத்தில் தங்கிவிடும்.
🌾 மழைக்காலங்களில் மட்டும் நெல் வயலில் 5 செ.மீ. நீர் இருக்கும்படி செய்து அதிகப்படியான நீரை வடித்து விட வேண்டும்.
🌾 கதிர் பருவத்தில் அதிக மழையினால் அல்லது கால்வாயில் அதிக நீர் வந்தாலோ 5 செ.மீ. உயரத்திற்கு மேல் நீர் தேங்காமல் அதிக நீரை வடிகட்ட தகுந்த வழிமுறைகளை கையாள வேண்டும். அதிக நீர் இருந்தால் கதிர் விடுதல் தாமதமாகும். மணிகள் குறையும்.
🌾 இதேபோல் மேலுரம் இடும் போதும் நீரை வடித்தபின் உரமிடவும். வேப்பங்கொட்டை தூள் போட்டால் 2 நாட்கள் கழித்து நீர் கட்டலாம்.
நீர் பாய்ச்ச வேண்டிய தருணங்கள் :
🌾 நெல்லில் வேர் பிடிக்கும் தருணம், சிம்பு வெடிக்கும் பருவம் ஆகிய தருணங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் வேரின் வளர்ச்சி மாறும். அதனால் சிம்பு வெடித்தல் பாதிக்கப்படும்.
🌾 முடிவில், மகசூல் பாதிக்கப்படும். எனவே, இந்த தருணங்களில் கட்டாயம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
🌾 நெற்பயிரை பொறுத்தமட்டில் புறக்கதிர் உருவாகும் தருணம், தொண்டைக்கதிர் பருவம், கதிர்விடும் தருணம், பூக்கும் பருவத்தில் தண்ணீரின் அளவை கவனித்து சரியாக நீர் பாய்ச்ச வேண்டும். இந்த கால கட்டங்களில் நிலத்தில் கட்டாயம் ஈரம் இருக்க வேண்டும்.
🌾 பூ பிடிப்பதில் இருந்து பால் இறுகும் வரை நெற்பயிருக்கு நீர் அவசியம். இந்த நிலையில், நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டால் மகசூல் 80 சதவீதம் வரை பாதிக்கப்படும்.
பாசனம் :
🌾 நெல்லுக்கு நீர் பாய்ச்சும்போது முதலில் மேடான வயல்களுக்கு பாசனம் அளிக்க வேண்டும். இதனால் தாழ்வான வயல்கள் மேல் வயலின் கசிவு நீராலும் மற்றும் உள்ளோட்ட நீராலும் பயனடையும்.
🌾 நடவு செய்த 7 முதல் 10 நாட்களுக்குப் பிறகு 5 செ.மீ. தண்ணீரை நிறுத்தி நீர் மறைய நீர் கட்ட வேண்டும்.
🌾 பொதுவாக, கால்வாய் பாசனப்பகுதிகளில் கால்வாய்களில் நீர் வரத்தை எதிர்நோக்கி நெல் நேரடி விதைப்பு