Fall Armyworm (spodoptera frugiperda) is a pest that is becoming a menace all over India for farmers. It can damage and destroy a wide variety of crops, some of the main ones being maize, soybean etc.
Fall Armyworm can be easily detected by the letter Y on its head region and four dots found on its tail region.
It was first reported in Telangana and Andhra Pradesh regions, and has now spread to Tamil Nadu, Karnataka, Orissa, Gujarat, Maharashtra and Madhya Pradesh. The picture below shows how it has spread in India over a period of time.
Recommendations For Cure
- Scientists advise thorough ploughing if the pest is noticed, so that the pupae, hiding in the soil, is exposed to birds and predators.
- It is also recommended that applying 250kg of neem cake per hectare will stop the pupae from becoming an adult.
- Another recommendation is to avoid repeatedly growing maize in succession and alternate with other crops.
- There are insecticides such as Azadirachtin and Thiodicarb which can be used in appropriate quantity to protect the crop.
If you suspect your crop is infected with FAW, please take a picture of it and send it to us, and we will help you with the right recommendations on the next steps.
Here is another good write up in Tamil on this topic:
மிகப்பெரிய எதிரியைகூட எளிதாக வெல்ல முடியும் தானே?
மக்காசோள படைப்புழு 80 வகை தாவரங்களை தாக்கவல்லதாக இருந்தாலும் தற்சமயம் மக்காசோளத்தை மட்டுமே தாக்கி வருகிறது.
மக்கா விதைத்தவுடன் 10 வது நாளிலிருந்து ஒரு ஏக்கரில் உள்ள அனைத்து அதாவது (1,77,000செடிகளிலும்) தாய்ப்பூச்சி முட்டையிட்டு அதலிருந்துவரும் சிறு புழுக்கள் இலைகளை சுரண்டி சாப்பிட ஆரம்பிக்கிறது. அதிலிருந்து பெரிதாகும் புழுக்கள் 12-40 நாள் பருவத்தில் உச்சகட்ட சேதத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதன்பின் செடியின் வளர்ச்சி எவ்வித கட்டுபாட்டு முறைகளுக்கும் ஏற்றதல்லதாகி விடுகிறது
மொத்தம் 7 முறை புழுக்கள் சட்டை உரித்து பின் Pupae ஆகி 40 நாட்களில் தாய் அந்துப்பூச்சி ரெடியாகிவிடுகிறது.
அதனால் 15-40 நாட்களுக்குள் அதனை கட்டுப்படுத்துவது அவசியமாவதோடு அந்த சமயத்தை தவற விட்டுவிட்டால் ஒரு ஏக்கர் புழுக்கள் ஒரு தாலூக்காவின் அனைத்து மக்கா பயிர்களை அடுத்த போகத்தில் அழிக்கும் அளவிற்கு வல்லமை உள்ளது.
இது புது வில்லனாக இருப்பதால் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை பூச்சி மருந்துகள் எடுபடுவதில்லை.
அதனால் மூன்றாம்/ நான்காம் தலைமுறை மருந்துகளை குறிப்பாக
(Emamectin Benzoate 10கிராம்/10லி )
15-17 நாட்கள்வயதில் அதாவது 4 இலை பருவத்தில் கைத்தெளிப்பான் மூலம் மட்டுமே தெளிக்கவேண்டும். விசைத்தெளிப்பானுக்கு வேலையே இல்லை. முதல் தெளிப்பிலேயே 99 சத புழுக்கள் அழிக்கப்பட்டுவிட்டாலும் எஞ்சியுள்ள சில மற்றும் புதிய முட்டையிலிருந்து வருபவற்றை கட்டுப்படுத்த இரண்டாம் தெளிப்பு அவசியம்.
இரண்டாம் தெளிப்பு ( மீண்டும் கைத்தெளிப்பான் மூலம் மட்டுமே)30-40 வது நாளில் அவசியம். அதற்கு மீண்டும் மூன்றாம்/ நான்காம் தலைமுறை மருந்துகளைவிட பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (குர்ஸ்டகி) 2கிராம்/ 10லி என்ற அளவில் குருத்துக்களில் மட்டும் ஊற்றுவது / தெளிப்பது நல்ல பலன் தருகிறது.
பூச்சி மருந்துகளில்கூட ஒரு சில புழுக்கள் தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளது. ஆனால்இதில்100 சத புழுக்களின் மரணம் நிச்சயம்.
எல்லாவற்றிற்கும் மேல் அப்புழுக்களுக்கு மிகவும் பிடித்த இனிப்பை தர நாட்டுச்சக்கரை ஒரு கிலோ கரைத்து மருந்துடன் கலந்து தெளித்தல்வேண்டும்.
இவ்வாறு செய்தால் இப்புழுக்களை எளிதாக கட்டுப்டுத்த முடிகிறது. இதில் சிறு தவறோ/ காலதாமதமோ இருப்பின் பயிரை இழந்து விட வேண்டியது தான்.