Sikkim has become the first state in the world to have adopted 100% Organic Farming. As a result, it has been given the Future Policy Gold Award by UN Food and Agriculture Organisation (FAO).
The press release says:
Gold Prize winner Sikkim is the first organic state in the world. All of its farmland is certified organic. At the same time, Sikkim’s approach reaches beyond organic production and has proven truly transformational for the state and its citizens. Embedded in its design are socioeconomic aspects such as consumption and market expansion, cultural aspects as well as health, education, rural development and sustainable tourism. The policy implemented a phase out of chemical fertilisers and pesticides, and achieved a total ban on sale and use of chemical pesticides in the state. The transition has benefitted more than 66 000 farming families. The Sikkim tourism sector has benefitted greatly from the state’s transition to 100 percent organic: the number of tourists increased by over 50 percent between 2014 and 2017. As such, Sikkim sets an excellent example of how other Indian states and countries worldwide can successfully upscale agroecology.
Full details about the other awards available in this link: https://www.worldfuturecouncil.org/press-release-2018-fpa2018-winners/
இயற்கை விவசாயத்தில் அசத்திய சிக்கிம் மாநிலத்திற்கு ஐ.நா விருது !!
இயற்கை விவசாயத்தில் அசத்தும் சிக்கிம் மாநிலம் !!
🍂 சிக்கிம் 100 சதவீதம் இயற்கை விவசாய மாநிலமாக 2 ஆண்டுகளுக்கு முன்பே மாறி விட்டது. இப்போது அதே வழியை வடகிழக்கு மாநிலங்கள் பின்பற்றி வர ஆரம்பித்து உள்ளன. இப்போது நம் அண்டை மாநிலமான தெலுங்கானா மாநிலமும் ஆரம்பித்து உள்ளது.
🍂 இப்போது இயற்கை விவசாயத்தில் முன்னோடியாக உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து கவுரவிக்கப்பட்டுள்ளது.
🍂 இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது சிக்கிம். இம்மாநில மக்கள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் விவசாயம் செய்து வருகின்றனர்.
🍂 அம்மாநில முதல்வர் முயற்சியால், நவீன முறை விவசாயத்திற்கு மாற்றாக, பாரம்பரிய விவசாய முறையை கடைபிடித்து வருகின்றனர். இங்கு, 76,393 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது.
🍂 மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கோதுமை, பழ வகைகள் அங்கு பயிரிடப்பட்டு வருகின்றன. இதனால் சிக்கிம் முழுமையான இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. மக்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளை அதிக அளவில் இயற்கை முறையில் பயிரிட்டு வருகின்றனர்.
🍂 இதன் பயனாக கடந்த நிதியாண்டில் 80,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு இயற்கையான முறையில் காய்கறிகள் அம்மாநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்து வரும் சிக்கிம் மாநிலம், வெளி மாநிலங்களுக்கும் இயற்கை காய்கறிகளை விற்பனை செய்யும் அளவிற்கு முந்தைய இலக்கை கடந்து சாதனை படைத்து வருகிறது.
🍂 நிலத்தின் பெரும்பகுதியில் தானியங்களும், ஒரளவு காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. கூடுதல் காய்கறி சாகுபடி செய்ய போதுமான நிலம் இல்லாததால், வீட்டுத் தோட்டங்களில் காய்கறி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
🍂 சிக்கிம் மாநிலத்தில் வீடுகளில் காய்கறி சாகுபடி செய்ய தேவையான இடுபொருட்கள் வீட்டுதோட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 14 கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
🍂 இதன் மூலம் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட விளை பொருட்களை வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யும் அளவிற்கு சிக்கிம் வளர்ந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தின் இந்த சாதனையை பாராட்டி ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த கொள்கைளை அமல்படுத்தியதற்காக ஐ.நா கவுன்சில் இந்த விருதை அறிவித்துள்ளது.
🍂 ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு வழங்கும் பியூச்சர் பாலிஸி – 2018 விருது நிலைக்கத்தக்க வளர்ச்சியை எட்டியதற்காகவும், நீண்டகால திட்டமிடலுடன் செயல்படுத்தியதற்காகவும் வழங்கப்படுகிறது. சிக்கிம் அரசின் முயற்சியால் 66 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளதுடன், சுற்றுலாவும் விரிவடைந்துள்ளது.
🍂 மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தி மக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டதற்காகவும் இதன் மூலம் சுற்றுலா பயணிகளை பெருமளவு ஈர்த்ததற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு 51 நாடுகள் போட்டியிட்டன. மற்ற நாடுகளை முந்தி உலகின் முதல் இயற்கை விவசாய மாநிலமான சிக்கிம் இந்த விருதை தட்டிச் சென்றது.
இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒதுங்கி நிற்கும் மாநிலமான சிக்கிம்.
முதல்வரின் முழு முயற்சி
இதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் அந்த மாநிலத்தின் முதல்வர் பவன்குமார் சாம்லிங். தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராக இருக்கும் இவர், அடிப்படையில் ஒரு விவசாயி. உணவையும் நிலத்தையும் நஞ்சாக்கும் நவீன விவசாயத்திலிருந்து மாற்றத்தை விரும்பிய பவன்குமார், 2003-ல் சிக்கிம் மாநிலத்தை ’ஆர்கானிக் ஸ்டேட்’ எனச் சட்டப்பேரவையில் பிரகடனம் செய்தார். ‘மாநிலத்தில் ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ‘ஒரு லட்ச ரூபாய் அபராதம்; மூன்றாண்டுகள் சிறை தண்டனை’எனவும் தடாலடியாக அறிவித்தார்.
வழக்கம் போல இந்த அறிவிப்பு அரசியலாக்கப்பட்டு எதிர்ப்புகள் தூண்டிவிடப்பட்டன. எதைப்பற்றியும் கவலைப்படாத பவன்குமார், தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘ஆர்கானிக் ஸ்டேட் போர்டு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்றுவது என தீர்மானித்துக் கொண்டு செயலில் இறங்கியது இந்த வாரியம்.
மத்திய மானியம் மறுப்பு
ஒரு பக்கம் இயற்கை வேளாண்மையை ஆதரிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரம், மறுபுறம் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கும் இயற்கை உரங்களைத் தயாரிப்பதற்கும் தாராளமான மானியங்களை வழங்கியது மாநில அரசு. மாநிலம் முழுவதும் 24,536 இயற்கை உரத் தயாரிப்பு மையங்களும் 1,447 பசுந்தாள் உரத் தயாரிப்பு மையங்களும் அரசால் நிறுவப்பட்டன. இயற்கை உரத் தயாரிப்பு முறைகள் குறித்து உழவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளால் 2009-ம் ஆண்டு இறுதிக்குள் எட்டாயிரம் ஏக்கர் நிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற்றப்பட்டன. இதற்கிடையே, 2006-07-ம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய மானியத்துடன் கூடிய ரசாயன உரக் கோட்டாவை வேண்டாம் என்று அறிவித்தார் பவன்குமார். அடுத்தகட்டமாக ஓராண்டுக்குள் 14 ஆயிரம் ஏக்கரை நஞ்சில்லா பூமியாக மாற்றுவது எனத் திட்டமிடப்பட்டு, அதுவும் நிறைவேற்றப்பட்டது.
உயிர் கிராமங்கள்
இதன் தொடர்ச்சியாக ‘சிக்கிம் ஆர்கானிக் மிஷன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு இயற்கை வேளாண் முறைகள் பிரபலப்படுத்தப்பட்டன. இந்தக் கிராமங்களுக்கு ‘பயோ வில்லேஜ்’ என்று அழைக்கப்பட்டன. நல்ல திட்டங்கள் பலன் தராமல் தோற்றுப்போனதற்குக் காரணமே தொடர் ஆராய்ச்சிகளும் வளர்ச்சியும் இல்லாமல் போனதுதான்.
இதைப் புரிந்துகொண்டு இயற்கை வேளாண்மையை மேம்படுத்தவும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும், Center Of Excellence For Organic Farming என்ற ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். இத்தனை முன்னேற்பாடுகளுடன் 2015-ம் ஆண்டு இறுதிக்குள் சிக்கிம் மாநிலத்தை நஞ்சில்லா விவசாயப் பூமியாக மாற்றத் திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகச் சாதித்தும் காட்டியிருக்கிறது பவன்குமார் சாம்லிங் அரசு.
தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தாலும் இப்போது சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் மகத்துவம் புரிகிறது. இவர்கள் விளைவிக்கும் இயற்கை வேளாண் பொருட்களை வாங்குவதற்கு டெல்லி, மத்திய ஆசிய நாடுகளில் தவம் கிடக்கிறார்கள்.
எடுபடாத எதிர்ப்பு
அண்மையில் சிக்கிம் சென்றிருந்த தேசியப் பிற்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் கார்வேந்தன், அங்குள்ள இயற்கை வேளாண் நிலங்களையும், விவசாயிகளையும் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:
’’நானும் ஒரு இயற்கை விவசாயிதான். அந்த ஆர்வத்தில் சிக்கிம் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினேன். சிக்கிமின் சில மலைப் பகுதிகளில் வாழும் ஒருசிலர் இயற்கை விவசாயத்தை எதிர்த்தாலும், அது எடுபடவில்லை. சிக்கிம் மாநிலத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இயற்கை வேளாண்மை மூலம் கடந்த ஆண்டில் மட்டுமே 80 ஆயிரம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சிக்கிம் விவசாயிகள் உற்பத்தி செய்திருக்கிறார்கள். இதில் இஞ்சி 45,890 மெட்ரிக் டன், மோட்டா ரக மிளகு 3,510 மெட்ரிக் டன், மஞ்சள் 2,790 மெட்ரிக் டன், சன்ன ரகக் கோதுமை 4,100 மெட்ரிக் டன்.
வருடத்தில் மூன்று மாதங்கள் அங்கே கடும் குளிர் நிலவும். அதை சமாளிப்பதற்காக உடலுக்குக் கேட்டை உண்டாக்காத, ரசாயனம் கலக்காத ‘பயோ விஸ்கி’யையும் அங்கே தயாரிக்கிறார்கள்.
இயற்கை உரத் தொழிற்சாலை
பயோ ஃபெர்ட்டிலைசர்ஸ் என்று சொல்லப்படும் இயற்கை உரம் தயாரிக்கும் பெரும் தொழிற்சாலையை அரசே நிறுவியிருக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 3000 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்க முடியும். தெற்கு சிக்கிமில் ராவங்லா என்ற இடத்தில் 440 ஏக்கரில் அரோமா ஆர்கானிக் தேயிலைத் தோட்டத்தையும் அரசு நடத்துகிறது. இங்கு விளையும் உலகத் தரம் வாய்ந்த தேயிலை பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மிகவும் பின் தங்கிய சிக்கிம் மக்கள் ரசாயனத்தின் ஆபத்தை உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால், நாம் அது குறித்த விழிப்புணர்வுகூட இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது” என்கிறார் கார்வேந்தன்.
ஜனவரி 18-ம் தேதி, சிக்கிமில் நடந்த விவசாயிகள் கருத்தரங்கில் இயற்கை விவசாயத்தில் சாதித்த பவன்குமார் சாம்லிங்குக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
எப்போது மீள்வோம்?
“பசுமைப் புரட்சிக்கு முன்பு நாட்டில் இவ்வளவு நோய்கள் இல்லை. அதிக மகசூல் என்று ஆசைகாட்டி நிலங்களையும் உண்ணும் உணவையும் விஷமாக்கி விட்டார்கள். ரசாயன உரங்கள், உணவு உண்ணும் அத்தனை உயிர்களையும் சிறுகச் சிறுகக் கொல்கின்றன. ரசாயன உரங்களை ஒழிக்கப் போராடுவதுதான் இப்போது முக்கியம்.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். இதற்கு ரசாயன உரங்களும் முக்கியக் காரணம். சிக்கிமைத் தொடர்ந்து உத்தராகண்ட், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றன. ராஜஸ்தான், பஞ்சா மாநிலங்களில் இது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ஆனால், வளமான விவசாயப் பூமியைக் கொண்ட தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த புரிதல் வேளாண் அதிகாரிகளுக்கே இல்லையே” என்கிறார் உழவர் உழைப்பாளர் கூட்டமைப்பினர்.
மெல்லக் கொல்லும் ரசாயனத்தின் பிடியிலிருந்து சிக்கிம் மீண்டுவிட்டது. தமிழகம்?
வாட்ஸ்அப்க்கு மிகப்பெரிய சக்தியை கொடுத்து இந்த செய்தியை தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும்
தெரியப்படுத்த வேண்டும்.